Breaking News

கீர்த்தி சுரேஸை துரத்தும் நியூமராலாஜி கண்டம்... தப்பிக்குமா சர்கார்...?


கீர்த்தி சுரேசுக்கும் "S"ல் ஆரம்பிக்கும் அவரது படங்களுக்கு இருக்கும் கண்டம் குறித்த தகவலும் தான்  தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாக்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக விளங்கி வரும் நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நாயகர்களோடு ஜோடி சேர்ந்து விட்ட இவரது நடிப்பில் விரைவில் சர்கார் திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் தான் வெளியாகி இருக்கிறது, கீர்த்தி சுரேஷுக்கும் அவரது "S" எழுத்தில் துவங்கும் படங்களுக்கும் உள்ள கண்டம் குறித்த ஒரு தொடர்பு. அதாவது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டகோழி என "S"ல் துவங்கிய அனைத்து திரைப்படங்களுமே மெகா பிளாப்.

விரைவில் வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படமும் "S"எழுத்தில் ஆரம்பிப்பதால், கீர்த்திசுரேஷின் கண்டதிலிருந்து சர்கார் தப்பிக்குமா என வேடிக்கையாக கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பாப்போம்..!