Friday, 9 November 2018

"சர்கார்" அரசியல் நெருக்கடிகளை சமாளிக்க விஜய் போட்ட ஸ்கெட்ச்...!


A.R முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்க்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் விமர்சன காட்சிகளால் தமிழகமெங்கும் அதிமுக கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கோவை மற்றும் சென்னை தியேட்டர்களில், நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டிருந்த கட்டவுட்களும் அக்கட்சியினரால் கிழித்தெறியப்பட்டு வருகிறது.    


இந்த போராட்டமானது மேலும் வலுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க, சிறிய அறிவுரையானது நடிகர் விஜயின் தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.


அதன் படி போராட்டங்களிலோ, கைகலப்பிலோ ரசிகர்கள் எவரும் ஈடுபட கூடாது என நடிகர் விஜயின் தரப்பு அனைத்து மாவட்ட ரசிகர் மன்றங்களுக்கும் உத்தரவிட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இன்று தேசிய அளவில் பேசும் பிரச்சனையாக இந்த சர்கார் விவகாரம் பூதாகரமாக வெடித்திருப்பதால், மெர்சல் போலவே சர்கார் திரைப்படத்திற்கும் நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது.


மேலும் ஆளும் கட்சியின் மேல் பெரும்பாலான தமிழக மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காகவே சர்கார் திரைப்படத்தை பார்க்க பலர் ஆர்வம் காட்டுவார்கள் என்பதும் திரைத்துறையினரின் கணிப்பு.

இப்போதைக்கு உம்முனு கம்முன்னு இருங்க படம் ஜம்முன்னு ஓடும் என்கிறாரோ தளபதி..?
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();