Thursday, 8 November 2018

மூன்றாவது குழந்தையை ஈன்றெடுத்த நடிகை ரம்பா...!


90களில் தமிழ் தெலுங்கு திரையுலகை ஒரே நேரத்தில் மிரட்டி பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம்வந்தவர் நடிகை ரம்பா. இவரது திரையில் பார்த்து விட்டு 'உன்னருகே நான் இருந்தால்' திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் 'ரம்பா சார்' என குழைவதை போல அக்காலகட்டத்தில் குழைந்த ரசிகர்களும் ஏராளம்.

என்றாலும் திருமணத்திற்கு பின் படவாய்ப்புகள் குறைந்து கேட்பாரற்று கிடக்கும் இந்த தொடையழகி, 'தலையெழுத்தே' என சின்னத்திரையில் தலைகாட்டி வந்தார்.

அதிலிருந்தும் சில மாதங்கள் அவர் காணாமல் போய் இருந்த நிலையில் தான் வெளிவந்துள்ளது அவர் தனது மூன்றாவது குழந்தையை ஈன்று எடுத்திறுக்கும் மகிழ்ச்சியான தகவல்.


கடந்த 2010ம் வருடம், இந்திரகுமார் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரு மகள்கள் உள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி மூன்றாவதாக ஒரு மகனும் அவரது குடும்பத்தில் இணைந்து இருக்கிறார்.


     
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();