Breaking News

ரஜினி பட நடிகை மீது வந்த ஓரின சேர்கை புகார்..! இணையத்தில் வைரலாகும் பதிவு


MeToo இயக்கம் இந்தியாவில் காலூன்றியதன் விளைவாக பலதரப்பு பெண்களும் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேச துவங்கி இருக்கின்றனர்.

பெண்கள் மட்டுமல்லாது ஒரு சில ஆண்களும் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகள் குறித்து பேசி வரும் நிலையில், ஓரின சேர்க்கை புகார்களும் அதிகம் வெளிவர துவங்கியுள்ளது.

அவ்வகையில் சமீபத்திய ஓரின சேர்க்கை புகாரில் சிக்கி இருக்கிறார், ரஜினியின் 2.0 திரைப்பட நடிகை ஒருவர். குறும்படங்கள், விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் ரஜினியின் 2.0 திரைப்பட பிரபலம் ஆகியவற்றால் இளம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு அறியப்படுபவர் 'மாயா எஸ் கிருஷ்ணன்'.

இவர் ஒரு நாடக நடிகையும் ஆவார், சமீபத்தில் கூட தெலுங்கில் பிரபலமான 'இங்கெம் இங்கெம்' பாடலை இவர் கலாய்த்து பாடியிருந்த குறும்பட வீடியோ செம வைரல் ஆனது.

இப்படியொரு வளர்ந்து வரும் சூழ்நிலையில், மாயா தனக்கு உடல் மற்றும் மன ரீதியான தொல்லை அளித்ததாக பதிவு ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார் நாடக நடிகையான அனன்யா என்பவர்.

குறிப்பிட்ட பதிவில், மாயா தன்னை பெற்றோர்கள் மற்றும் நட்பு வட்டாரத்திடம் இருந்து தனிமை படுத்தி அவரது இஷ்டப்படி நடக்க வற்புறுத்தியதாகவும், ஒருமுறை அவருடன் தங்கும் சூழ்நிலை ஏற்படவே, முத்தம் கொடுப்பது, கட்டி அணைப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்த குற்றச்சாட்டிற்கு உடனடியாக,  '18 வயது பெண்ணாக அவரது மன நலனை கவனத்தில் கொண்டே அவருடன் பழகினேன். அதுவே எனக்கு வினையாக முடிந்துவிட்டது. அவரது பதிவில் என்னை ஒரு குற்றவாளியை போல குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது இந்த செய்கைக்காக வழக்கு பதிவும் செய்திருக்கின்றேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி' என தன் சமூக வலைதள பதிவில் மாயா பதில் அளித்து இருக்கிறார.