Breaking News

முன்னால் காதலன் பிறந்தநாள் பார்டியில் குத்தாட்டம் போட்ட ஓவியா..! வெளியான புகைப்படங்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சியால் இன்று ஒரு நாயகிக்கு கிடைக்கும் மிகப்பெரிய மதிப்பு மரியாதையை ரசிகர்களிடம் பெற்றிருப்பவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சியின் போது அவரைப் பற்றி அதிகம் பேசப்பட்டவை, உண்மையாக நடந்துகொண்டதும், சக போட்டியாளர் ஆரவை காதலித்தும் தான்.

ஆனால் மருத்துவ முத்தம் எல்லாம் கொடுத்துவிட்டு, காதல் என்றதும் ஆரவ் நைசாக நழுவிக்கொள்ள மனம் உடைந்து போனார் ஓவியா. அதன் பிறகு அவரே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினார்.

இப்படியொரு சம்பவத்திற்கு பின்னும் தங்களது நட்பை தொடர்ந்தனர் ஆரவ் மற்றும் ஓவியா. பிறந்த நாள் பார்ட்டிகள், வெளிநாட்டு சுற்றுலா என இவர்கள் ஒன்றாக ஊர் சுற்றிய புகைப்படங்களும் வெளியானது.


இந்த வரிசையில் மீண்டும் வெளியாகி இருக்கிறது, ஆரவ் ஓவியாவின் புகைப்படம். இம்முறை ஆரவின் பிறந்த நாள் பார்டியில், இவர்களுடன் பிந்துமாதவி போன்ற பிற பிரபலங்களும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தம்பி என சொந்தம் கொண்டாடிய பிரபலங்கள் ஆரவை கண்டு கொள்ளாத நிலையில், மிகப் பெரும் நாயகியாகிவிட்ட நிலையிலும் அவருடன் ஓவியா பழகி வருவதுதான் உண்மையான அன்பு என ரசிகர்களை கருத்து சொல்ல வைத்துள்ளது.