Monday, 12 November 2018

விஜய், விஷால் போல "மக்கள் இயக்கம்" துவங்கும் நயன்தாரா...? நீங்களுமா...?


திரைத்துறையில் நல்ல பெயரை சம்பாதித்து புகழில் உச்சம் தொடும்நடிக நடிகைகளிடம், அரசியலை ஒரு கை பார்த்துவிடும் ஆசையும் ஆட்டோமேட்டிக்காக வளர்ந்து விடுகிறது.

ரஜினி, கமல், விஜய், விஷால் என நீண்டு கொண்டே செல்லும் இந்த பட்டியலில் நடிகை நயன்தாராவும் இணைந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பேச வைத்திருக்கிறது அவரது அடுத்த திரைப்படத்தின் கதைக்களம்.

திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த புதிதில், அழகு கவர்ச்சி என சராசரி நாயகியாக வலம்வந்த நயன், தற்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

அதிலும் அவர் கலெக்டராக நடித்த அறம் திரைப்படம், ஒரு நாயகி என்பதை தாண்டி நன்மதிப்பை மக்களிடம் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குனரான கோபி நயினார் அவர்களது இயக்கத்தில் அறம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் நயன்.

அறம் படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் 'அறம்-2'வில் நேர்மையாக இருந்த காரணத்தினால் நயன்தாரா பதவி நீக்கம் செய்யப்படுவதும், தொடர்ந்து மக்கள் இயக்கம் ஒன்றினை உருவாக்கி அப்பாவி மக்களுக்கு நீதி கேட்டு போராடுவதுமாக கதைக்களம் அமைய இருப்பதாக கூறப்படுகிறது.


இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விஜய், விஷால் போல நயன்தாரா, நிஜத்திலும் மக்கள் இயக்கம் ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை  என்கிறது சினிமா வட்டாரங்கள்.      
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();