Breaking News

பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஒரு முத்தம் போதும்..! நடிகை சொன்ன வித்யாசமான யோசனை


திரையுலகில் நடிகை, நடிகர்கள் பலர் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் நிலையில், வித்யாசமான யோசனை ஒன்றினை கூறி வியக்க வைத்திருக்கிறார் சீரியல் நடிகை பாப்ரி கோஷ்.

சின்னத்திரை உலகில் மிகப் பிரபல டிவி தொடரான, நாயகியில் கண்மணி எனும் கதாப்பதிரத்தில் நடித்து பிரபலமானவர்  பாப்ரி கோஷ். இவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் 'மீட்டூ' இயக்கம் குறித்தும் சின்னத்திரை உலகில் உள்ள பாலியல் சீண்டல்கள் குறித்தும் பதில் அளித்திருந்தார்.

அப்பொழுது, "என் அனுபவத்தில் அப்படியொரு சீண்டல்களை நான் சந்தித்ததில்லை. நான் நடித்து வரும் நாயகி தொடரின் குழுவில் நான் பாதுகாப்பாகவே உணர்கிறேன்.


பாலியல் சீண்டல்கள் குறித்து உங்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் மட்டும் பேசுங்கள். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தால் அவர்களுக்கு ஒரே ஒரு முத்தம் கொடுங்கள். அதாவது அவர்களது மனைவி, குழந்தையின் முன்பு, மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்" எனப்பேசி கைதட்டல்களை அள்ளி இருந்தார்.