Thursday, 1 November 2018

வில்லியா நடிக்கணும்...! சிரிப்பழகி லைலாவின் வினோத ஆசை


தமிழ் சினிமா ரசிகர்களை தன்னக்கே உரிய குழந்தை தனமான சிரிப்பால் கவர்ந்தவர் நடிகை லைலா. அஜித், சூர்யா, விக்ரம், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நாயர்களுடன் நடித்து 2000'களில் முன்னணி நாயகியாக வலம்வந்த இவர், திருப்பதி திரைப்படதிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு திரையுலகிற்கு குட்பை சொல்லி சென்றுவிட்டார்.

இந்நிலையில் இவர் மீண்டும் நடிக்க வரும் தகவல்கள் வெளியாக துவங்கி இருக்கும் வேளையில்,  அதனை உறுதிப் படுத்தும் விதமாக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் லைலா.

ஈரானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மணந்து மும்பையில் வசித்து வந்த லைலா, தற்பொழுது கோலிவுட் ரீஎன்ட்ரி காரணமாக சென்னைக்கு விசிட் அடித்திருக்கிறார்.


இத்தனை வருட இடைவெளி குறித்தும், அடுத்து நடிக்க இருப்பது குறித்தும் குறிப்பிட்ட நேர்காணலில் பேசிய அவர், "இதுவரை நல்ல ரோல்கள் தேடி வராத காரணத்தினாலேயே, நடிக்கவில்லை. நெகட்டிவ் கேரட்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்றிருந்தார்.

குழந்தை தனமான முகத்தையும், கியூட்டான சிரிப்பையும் கொண்டு மனம் கவர்ந்த உங்களை வில்லியா பார்க்க ரசிகர்கள் ஒத்துக்கணுமே மேடம்...!   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();