Breaking News

காணாமல் போன காஜல் அகர்வால்...! பின்னணியில் முன்னணி நடிகைகள்..! இது நாயகிகளின் பனிப்போர்

அரசியலில் மட்டுமல்ல, சினிமா உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் அரசியல் இருப்பது நாம் அறிந்ததே. ஒரு பதவியை அடைய விடாமல் மற்றொருவரின் காலை வாரி விடும் அரசியல் சூழ்ச்சிகள் சினிமா துறையில் கொஞ்சம் அதிகம் தான்.

இப்படியொரு அரசியல் சூழ்ச்சியில் சிக்கி தனக்கு கிடைக்க இருந்த படவாய்ப்புகளை இழந்து தவிக்கிறாராம் முன்னணி நடிகை காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் கொடிகட்டி பறந்த காஜலை மெர்சல் திரைப்படத்திற்கு பின்பு பிராதான படங்களில் பார்க்க முடியாமல் போனதற்கும் அதுவே காரணமாக கூறப்படுகிறது.

தனக்கு கிடைக்க இருந்த பட வாய்ப்புகளை, சம்பளத்தை குறைவாக பேசியும், 'காஜலுக்கு நாயகி முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தெரியாது' என்பது போல வதந்திகளை கிளப்பியும் பறித்து வருகிறார்களாம் முன்னனி நாயகிகள் சிலர்.

இதனால் பயங்கர கடுப்பில் இருக்கும் அவர், 'சிறிய நாயகர்களாக இருந்தாலும் பரவாயில்லை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே இனி நடிப்பேன்' என்ற ஒரு முடிவை எடுத்திருக்கின்றாராம்.