ஒருவழியாக துவங்கிய "இந்தியன்-2"... அசத்தலான அப்டேட் இதோ...!
பிரமாண்டத்திற்கு பெயர் போன சங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் இந்தியன். சுமார் 22 வருடங்களுக்கு பிறகு அதனுடைய இரண்டாம் பாக அறிவிப்பானது சென்ற வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
என்றாலும் தயாரிப்பில் எழுந்த சிக்கல் காரணமாக, படப்பிடிப்புகள் துவங்குவதில் ஒரு வருட தாமதம் ஏற்பட்டது. சங்கரின் 2.0 திரைப்பட கிராபிக்ஸ் பணிகளும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், பிக்பாஸ் முடிந்து கமலின் வருகைக்கு காத்திருந்தார் சங்கர்.
இதனால் ஏற்பட்ட தாமதம் ரசிகர்களை மேலும் காத்திருக்க வைத்தது. இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் வெளியாகி இருக்கிறது அப்படம் குறித்த தகவல்.
அதாவது, கலை இயக்குனர் முத்துராஜ் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் துவங்கி இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
Kick-started Set work for Indian2.. pic.twitter.com/8lAw3PxwhT— T Muthuraj (@muthurajthanga1) November 12, 2018
மேலும் இந்த செட் அமைக்கும் பணிகள் முடிந்த கையோடு, இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என்ற கூடுதல் தகவலும் சினிமா துறையில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.