Breaking News

திருமணம் ஆகாமலே கர்ப்பமடைந்த காயத்ரி..? ஒரே புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை


தமிழ் சினிமாவில் சார்லி சாப்ளின் படத்தின் மூலம் அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். பல வருடங்கள் காணாமல் போய் இருந்த இவரை பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.

அந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை படாத பாடு படுத்திய வில்லி காயத்ரியை ரசிகர்களும் படு பயங்கரமாக திட்டி தீர்த்து வந்தனர். அந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு வருட காலம் ஆகிய நிலையிலும், தொடர்ந்து வந்த இந்த வெறுப்பு சமீபத்தில்தான் குறைந்தது.

இப்படி இருக்க அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றில் சற்று வயிறு பெரியதாக, கர்ப்பிணி பெண்ணை போல காட்சியளித்து இருந்தார் காயத்ரி.

அந்த பதிவின் தலைப்பிலும் குழந்தையுடன் தாய் இருப்பது போன்ற ஈமொஜியும் இடம் பெறவே ரசிகர்களுக்கு தோன்றிய சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இதனால் பல்வேறு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், சுமார் 8 வருட காலமாக கணவரை பிரிந்து தனித்து வாழ்ந்து வரும் இவர் கர்ப்பமா...? என்ற சர்ச்சை கேள்வியையும் முன்வைத்து வருகின்றனர்.

நடிகை காயத்ரி கடந்த 2006ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து, 2010ம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியொரு சர்ச்சையினை அப்புகைப்படம் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காயத்ரி விரைவில் விளக்கம் அளித்தால் நல்லது என கருத்து தெரிவித்து வருகின்றனர் அவரது அபிமானிகள்.