Breaking News

மலை போல நம்பி இருந்த நாயகன்...! அல்வா கொடுத்த நாயகி....! அப்போ கல்யாணம்...?


கோலிவுட்டில் அடுத்து இவர்களுக்கு தான் திருமணம் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஜோடி பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் கொழுந்து விட்டு எரிய துவங்கியுள்ளது.

குறிப்பிட்ட வாரிசு நடிகரும், வாரிசு நடிகையும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அறிந்த ஒன்றே.

போதாக் குறைக்கு கலந்து கொள்ளும் நிகழ்சிகளில் எல்லாம் இருவரையும் இணைத்து வைத்து பேசி ரசிகர்களுக்கும் இந்த தகவலை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர் திரைத்துறையினர்.

நடிகரும் அரசியலில் நிற்கிறேன், கொடியை ஏத்துறேன் என அவ்வப்போது காமெடி செய்து வந்த நிலையில், கிட்டத்தட்ட உறுதியான திருமண செய்திக்கு மறுப்பு தெரிவித்து பின்வாங்கி இருக்கிறார் அந்த வாரிசு நடிகை.

இதனால் இருவருக்கும் திருமணம் நடக்குமா இல்லை, இதுவும் டைம் பாஸ் காதல்கள் லிஸ்டில் சேர்ந்து விடுமா என குழப்பத்தில் இருக்கின்றனர் திரையுலகினர்.