Friday, 2 November 2018

உயிருக்கே ஆபத்தென்று தெரிந்தும் விஜய் எடுத்த ரிஸ்க்...! பல வருடங்கள் கழித்து வெளியான தகவல்


தமிழ் சினிமாவில் இன்று அசைக்க முடியாத ஒரு நட்சத்திரம் என்ற நிலைக்கு வந்திருப்பவர் நடிகர் விஜய். இந்த இடத்திற்கு அவர் அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. தோல்விகள், அவமானங்களையும் கடந்து அவரது விடாமுயற்சியே இந்த நிலைக்கு அவரை கொண்டு வந்திருக்கிறது.

அவரது அந்த விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக 20 வருடங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து இருக்கிறார் இயக்குனர் விக்ரமன். நடிகர் விஜய் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த விக்ரமன்,

'விஜய் இப்பொழுது இருக்கும் நிலைக்கு வருவார் என்று எனது 'பூவே உனக்காக திரைப்படத்தில் நடிததபோதே தெரியும். நடனம், சண்டை, ஸ்டன்ட் என அனைத்திலும் அசத்துவார்.


வசனங்களை எல்லாம் ஒரு முறைதான் கேட்டபார், என்றாலும் ஒரே டேக்கில் ஒகே வாங்கிவிடுவார். பெரும்பாலும் சண்டைகாட்சிகளை டூப் ஏதும் இல்லாமல் தானே முடித்து கொடுக்கவே விரும்புவார்.

அவருக்கு குதிரை ஏற்றம் நன்கு தெரியும், ஒரு காட்சியில் 80 அடி உயர மலை சரிவில் வேகமாக குதிரையில் வருவது போன்ற ஒரு காட்சி. டூப் வேண்டாமென மறுத்து அவரே டேக்கிற்கு ரெடியாக, நடிக்கவும் தொடங்கிவிட்டார்.

காட்சி நன்றாக வந்துகொண்டிருந்த சமயத்தில், சறுக்கி குதிரையில் இருந்து கீழே விழுந்து பல மீட்டர்கள் படுவேகமாக உருண்டு வந்தார். அதிர்ஷ்டவசமாக அடியேதும் படவில்லை. என்றாலும் சிறிதும் தயங்காது, 'சாரி சார் ஸ்லிப் ஆகிடிச்சி இன்னொரு டேக் போலாம்' என அடுத்த டேக்கிற்கு தயாராகி விட்டார்.

நான் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. ' ஒன்னும் இல்ல சார், சின்ன கல்லு சறுக்கி விட்ருச்சி நான் பாத்துகிறேன்' என அடுத்த டேக்கிலேயே அந்த காட்சியை முடித்து கொடுத்தார்' என பெருமிதமாக பேசி இருந்தார். 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();