Friday, 2 November 2018

சர்கார் படுத்திய பாடு...! பதவி விலகிய பாக்யராஜ்...! அதிர்ச்சியில் திரையுலகம்


சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் உண்மையின் பக்கம் நின்றமைக்காக தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவரான பாக்யராஜிற்கு வாழ்த்துக்கள் குவிந்துவரும் நிலையில், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் நடிகர் பாக்யராஜ்.

பழம்பெரும் இயக்குனரான பாக்யராஜ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற பின்பு வந்த முதல் பஞ்சாயத்தே 'சர்கார்' கதை திருட்டு எனும் சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்துவிட்டாலும், தனது பணியை நேர்மையாக செய்வதில் கவனமாக இருந்தார் பாக்யராஜ்.


விளைவு, சர்கார் திரைப்படத்திற்கு எதிராக சூழ்நிலை அமைந்துவிட, தன் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பரான விஜக்கும், மாபெரும் நிறுவனமான சன் பிக்ச்சர்சுக்கும் எதிராக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் பாக்யராஜ்.

இந்த கஷ்டம் ஒரு புறம் என்றால்,  'சர்காரையே எதிர்த்து வென்ற நீங்கள் என் பட பிரச்சனையையும் தீர்த்து வையுங்கள்' என ஒருவர் பின் ஒருவராக, கதை திருட்டு விவகாரத்துடன் எழுத்தாளர் சங்க வாசலில் நிற்க, "சந்தித்த ஒரு பஞ்சாயதுக்கே கதி கலங்கி போய் விட்டது. இனி நமக்கு எதுக்கு வம்பு" என பதவி விலகல் குறித்து பாக்யராஜ் முடிவு செய்து விட்டதகா கிசு கிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();