Thursday, 1 November 2018

திருமணத்திற்கு பின்பும் ஜொலிக்கும் அசின்..! ரசிகர்களை கவர்ந்த சமீபத்திய புகைப்படம்


ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை அசின், பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்த பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார்.

தனக்கான மார்கெட் முற்றிலும் போன நிலையில், வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவிற்கு தள்ளப்பட்டு, மைரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


அதன் பின்பு அவ்வளவாக மீடியாக்கள் மத்தியில் தலைகாட்டாமல் இருந்து வந்த அவர், நீண்ட நாளுக்கு பின் வெளியிட்ட தனது மகளின் முதல் பிறந்தநாள் விழாவின், புகைப்படங்களால் ஓவர் நைட்டில் ட்ரென்ட் ஆகி இருக்கிறார்.   

பெரும்பாலும் நாயகிகள் திருமணத்திற்கு பின் அடையாளம் தெரியாத அளவிற்கு, எடை போட்டு ஆளே மாறிவிடுவார்கள் எனும் நிலையில்,  சமீபத்தில் வெளியான புகைப்படங்களிலும் உடலை முன்னணியில் இருக்கும் நாயகிகள் போல கட்டுகோப்பாக வைத்து வருகிறார் நடிகை அசின்.

இதனால் விரைவில் இவர் மீண்டும் நடிக்க வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். 


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();