Breaking News

முன்னணி நடிகருக்கு வில்லனாகும் அர்ஜுன்...! இருக்கு அதிரடி இருக்கு..!


நடிகர் அர்ஜுன் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு நாட்டை காப்பாற்றிய காலம் போய், தற்பொழுது தீவிரவாதியாகவே மாறி நாயகர்களை எதிர்த்து வருகிறார்.

'வொயிட் டெவில்' எனும் கதாப்பாத்திரத்தில் ஹேக்கர் மாபியா கும்பலின் தலைவனாக இரும்பு திரை படத்தில் மிரட்டி இருந்தார் அர்ஜுன். அவரது இந்த கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த ஆதரவு கிடைத்திருந்த நிலையில், அவரை தேடி வில்லன் கதாப்பாத்திர வாய்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் இரும்புத்திரை திரைப்படத்தினை இயக்கிய P.S. மித்ரனின் அடுத்த திரைப்படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அர்ஜுன். 24 AM ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் நாயகனாக நடிக்க இருப்பது நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்க இருப்பது யுவன் சங்கர் ராஜா என்பதும் கூடுதல் தகவல்.