Breaking News

ஒரு வழியா தல அஜித் தப்பிச்சிட்டாறு..! மகிழ்ச்சியின் உச்சத்தில் அஜித் ரசிகர்கள்


நடிகர் அஜித் விஸ்வாசம் திரைப்படத்தினை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட புகழ் வினோத்தின் இயக்கத்தில் நடிக்க இருக்கும் செய்திகள் திரையுலகை வலம்வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வீரம்,வேதாளம்,விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து சிவாவின் இயக்கத்தில் நடித்து வந்த அஜித்துக்கு விடுதலை கிடைத்து விட்டதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக விவேகம் திரைப்பட தோல்விக்கு பின்னர் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்க எடுத்த முடிவானது, அவரது ரசிகர்களை மிகுந்த வருத்தத்திற்கு ஆளாக்கியது.

'இப்படியொரு தோல்வி படத்திற்கு பின்பும் ஏன் இந்த கூட்டணி?' என இன்று வரை ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவலும், சிவா சிவகார்த்திகேயன் கூட்டணி குறித்த செய்தியும் வெளியாகி இருந்ததை தொடர்ந்து,, 'அப்பாடா தல தப்பிசிட்டாருடா' என நிம்மதி பெரு மூச்சி விடுகின்றனர் ரசிகர்கள்.


தல தப்பிசிட்டாறு ஆனா சிவகார்த்திகேயன் சிக்கிடாரே...! இது இன்னொரு ரசிகனின் மைன்ட் வாய்ஸ்