Friday, 2 November 2018

5 வயது பெண்ணாக இருந்த போதே என்னை விட்டுவைக்கவில்லை...! பரபரப்பை கிளப்பும் தனுஸ் பட நாயகி


MeToo விவகாரம் இந்தியாவில் தலைவிரித்து ஆடி வருகிறது. திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் 'எங்கே என் பெயர் வெளியே வந்துவிடுமோ?' என நடு நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஓரின சேர்கை, குழந்தை பருவ பாலியல் தீண்டல்கள் என வகை வகையான பாலியல் பிரச்சனைகளை அன்றாடம் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையினை பின்னாட்களில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் கேரள திரையுலகின் நடிகை பார்வதியும் குழந்தை பருவத்தில் தான் சந்தித்த பாலியல் தீண்டல் குறித்து மனம் திறந்திருக்கிறார்.

பூ, மரியான், உத்தம வில்லன், போன்ற திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி. MeToo இயக்க வருகைக்கும் முன்னரே பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசி வந்த இவர், 'பாலியல் குற்றவாளிகள் எவரையும் விட்டு வைப்பதில்லை. எனக்கு 5 வயதாக இருந்த போதே உறவினர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டார்.


அது தவறான செய்கை என்பதனை புரிந்து கொள்ளவே எனக்கு 17 வருடங்கள் தேவைப்பட்டது. அதனை வெளியே சொல்ல கூடுதல் 12 வருடங்கள் ஆகி இருக்கிறது' என விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசி இருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();