Breaking News

"தென்னிந்திய சினிமாவை விட்டு சென்றதற்கு இவர்தான் காரணம்"... இயக்குனர் மேல் பழியை போடும் இலியானா


இஞ்சி இடுப்பழகி இலியானா தமிழில் நடித்தது ஓரிரு படங்கள்தான் என்றாலும் அவற்றிலே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நாயகிகளில் ஒருவர்.

என்றாலும் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறந்த அவர், மொத்தத்திற்கும் முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட் பக்கம் நடையை கட்டிவிட்டார். இந்நிலையில் இது குறித்து அண்மையில் பேசி இருந்த இலியானா பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரின் மீது பழியை போட்டு இருக்கிறார்.

அல்லு அர்ஜுனோடு, இலியானா நடித்த தெலுங்கு திரைப்படம் ஜூலை. அந்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் கிடைத்திருக்கிறது பர்ஃபி எனும் பாலிவுட் பட வாய்ப்பு.


என்றாலும் தெலுங்கில் உச்சம் தொட்டிருந்த சமயம் அது என்பதால் தான் தயங்கியதாகவும், ஜூலை படத்தை இயக்கிய திரிவிக்ரம் தான், 'இது மிகப்பெரிய வாய்ப்பு மிஸ் பண்ணி விடாதே' என  அறிவுரை கூறியதாகவும், அந்த அறிவுரையின் படியே தான் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதாகவும் குறிப்பிட்டுஅவர் ,மீது பழியை போட்டு இருக்கிறார்.


விரைவில் "அமர் அக்பர் ஆண்டோனி"  எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு திரும்ப இருக்கும் அவர், பாலிவுட் சென்றதும் தென்னிந்திய திரையுலகை சரமாரியாக விமர்சித்து இருந்தார் என்பதும் நோட் செய்யப்பட வேண்டிய ஒரு தகவல்.