Breaking News

குழந்தை நட்சத்திரங்களாக அசத்திய தமிழ் சினிமா பிரபலங்கள் - புகைப்பட தொகுப்பு

திரைத்துறையில் நாயக நாயகிகள் பலர் குழந்தை நட்சத்திரங்களாக அடியெடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் ஜொலிக்காமல் போவதுதான் இயல்பு எனும் கூற்று நிலவி வரும் நிலையில் அதனை உடைத்தெறிந்து முன்னணி நாயக நாயகிகளாக ஜொலித்தவர்களின் தொகுப்பு இதோ.
நடிகர் விஜய் 

Third party image reference
இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நட்சத்திரமாக விளங்கிவரும் நடிகர் விஜய், 1984ம் ஆண்டு வெளியான வெற்றி எனும் திரைப்படத்தில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
நடிகர் கமல்ஹாசன்

Third party image reference
ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த "களத்தூர் கண்ணம்மா" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை உலகநாயகனாக ஜொலித்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன்.
நடிகர் சிம்பு 

Third party image reference
லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட சிம்பு நாயகனாவதற்கு முன் 10 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி இருந்தவர்.
நடிகை ஸ்ரீதேவி 

Third party image reference
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி, 1967ம் ஆண்டு தொடங்கி தமிழ், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
நடிகை மீனா

Third party image reference
90'களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்த மீனா எஜமான் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார். இவர் 26க்கும் மேலான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
நடிகை ஷாலினி 

Third party image reference
நடிகர் அஜித்தின் மனைவியும், முன்னாள் நாயகியுமான ஷாலினி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 36க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
நடிகை ஹன்சிகா 

Third party image reference
இன்றுவரை மார்க்கெட்டில் இருக்கும் ஒரே குழந்தை நட்சத்திர நடிகையான ஹன்சிகா 10 பாலிவுட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.