Tuesday, 13 November 2018

"நான் ஹாலிவுட் நாயகியின் படுக்கையில் உறங்கியவன்"...! இந்திய இயக்குனர் சர்ச்சை பேச்சு


திரைப்படங்களை விளம்பரப்படுத்த செய்தித்தாள் விளம்பரங்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உபயோகப்பட்டதை விட சர்ச்சை எனும் ஒரு விஷயம் தற்பொழுது படுபயங்கரமாக உபயோகப்பட்டு வருகிறது.

இதற்கு சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தையும் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதே யுக்தியை கையாண்டு ஹாலிவுட் லெவல் கிசு கிசுவை கொழுத்திப் போட்டு இருக்கிறார் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் 'ஸ்ரீனு வைட்லா'.

ஸ்ரீனு வைட்லாவின் இயக்கத்தில் ரவிதேஜா, இலியானா நடித்து வருகிற நவரம்பர் 16ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'அமர் அக்பர் அந்தோனி'. இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

அதில் பேசிய இயக்குனர்  ஸ்ரீனு, அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்திய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் ஒரு சில காட்சிகள் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியான,  ஜெனிபர் லோபஸின் வீட்டில் நடைபெற்றதாகவும் அப்பொழுது, ஸ்ரீனு அவரது படுக்கையில்தான் உறங்கியதாகவும் வேடிக்கையாக பேசி இருந்தார்.


அவரது இந்த பேச்சு வேறு விதமாக ஊடங்களில் வெளியாகி வரும் நிலையில் அவர் நினைத்த படியே 'அமர் அக்பர் அந்தோனி' திரைப்படத்திற்கு எக்கச்சக்க விளம்பரம் கிடைத்துள்ளது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();