Breaking News

விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிக்கிய தல அஜித்..! சற்றுமுன் வெளியான வீடியோ


சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தற்பொழுது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களின் செல்போன் கேமராக்களில் சிக்கி இருக்கிறார் தல அஜித்.

ஒரே ஒரு முறை பார்த்து விட மாட்டோமா, புகைப்படம் எடுத்து விடமாட்டோமா என படப்பிடிப்பு பகுதி, விமான நிலையம் என ரசிகர்கள் அஜித் போன்ற பிரபலங்களை சுற்றி வருவது தற்பொழுது சகஜமாகி இருக்கிறது.

இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பு பகுதியில் ரசிகர்கள் அஜித்தை சூழ, அவர்களுடன் புகைப்படம் படம் எடுத்து கொள்ளும் காணொளியானது தற்பொழுது இணையத்தை வலம்வர துவங்கி இருக்கிறது.

கருப்பு நிற உடை, அதே நரைத்த முடி என நடிகர் அஜித் அதில் தோன்றி இருக்கும் நிலையில், இந்த சிறிய காணொளியையும் கொண்டாட துவங்கி இருக்கின்றனர் ரசிகர்கள்.

 
தொடர்புடைய கதைகள்
இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றிய அஜித்தின் உதவி - நெகிழும் சென்றாயன்