Breaking News

இணையத்தை கலக்கும் பேன்மேட் விஸ்வாசம் போஸ்டர்கள் - புகைப்பட தொகுப்பு

சிவாவின் இயக்கத்தில் தொடர்ச்சியாக நான்காவது முறை  நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம். அஜித் இரட்டை வேடத்தில் நடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தவிர்த்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனால் ரசிகர்கள், ஒருபுறம் அப்டேட் ஏதேனும் வெளியிடக்கோரி தயாரிப்பு நிறுவனத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தாலும், மறுபுறம் தாங்களே விஸ்வாசம் திரைப்பட போஸ்டர்களை டிசைன் செய்து வெளியிட்டு அதனையும் கொண்டாடி வருகின்றனர்.

அப்படி ரசிகர்கள் வெளியிட்ட விஸ்வாசம் போஸ்டர்களின் தொகுப்பு இதோ.