Breaking News

கேலி கிண்டல்களுக்கு இடையேயும் சாதனை படைத்த விஸ்வாசம்


வீரம் திரைப்படத்திற்கு பிறகு, கிராம பின்னணியில் அஜித் நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அதில் நடிகர் அஜித் கலர்புல்லான பின்னணியில், இரண்டு கைகளையும் விட்டு, புல்லட் ஓட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் அதனை கிண்டல் செய்யும் விதத்தில் தொடர்ந்து மீம்ஸ்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

வெளியான மீம்ஸ்களில் ஒன்று
மேலும் இந்த போஸ்டரானது பாலிவுட்டின் பேட்மேன் திரைப்பட போஸ்டரின் காப்பி எனவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இப்படி விஸ்வாசம் செகன்ட் லுக்கிற்கு ஒருபுறம் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்தாலும், அந்த தடை கற்களையே படி கற்களாக்கி தற்பொழுது சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட போஸ்டர் வெளியான ஒரு நாளில் மட்டும், ஐம்பத்தைந்தாயிரம் லைக்குகள், முப்பதிமூன்றாயிரம் ரீட்வீட்டுகள், பதினைந்தாயிரம் கமெண்டுகள் என மாபெரும் வரவேற்பை ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பெற்று இருக்கிறது. 


இந்த மதிப்பீடானது, எதிர்மறை விமரசனன்களால் கலக்கத்தில் இருந்த படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள் 

 "விஸ்வாசம் செகண்ட் லுக்" அஜித் ரசிகர்களை சீண்டும் மீம்ஸ்கள்