Tuesday, 16 October 2018

பிக்பாஸ் போட்டியாளர்களை கதறவிட்ட கானாபாடல் - வீடியோ


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சென்ற மாதம் முடிவுக்கு வந்தது. இதில் பலரும் எதிர்பார்த்தபடி நடிகை ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இந்த பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது பிரபல தனியார் டிவி சேனல். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நடன இயக்குனர் சாண்டி ஆடியிருந்த கானா பாடல் அனைவரையும் கவர்ந்தது.

குறிப்பிட்ட பாடலில் டேனி, மமதி சாரி, மும்தாஜ், ஜனனி, மகத், ஐஸ்வர்யா, யாஷிகா, தாடி பாலாஜி என அவர்கள் செய்திருந்த ஹைலைட்டான விசயங்களை தனது வழக்கமான பாணியில் கலாய்த்து தள்ளி இருந்தார் சாண்டி.

தங்களை வறுத்தெடுத்த அந்த கானா பாடலை கைதட்டியபடியே பிக்பாஸ் போட்டியாளர்கள் ரசித்தது (போல நடித்தது) தான் இங்கே ஹைலைட்.


      
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();