Breaking News

பாக்யராஜ், வருணுக்கு ஆதரவாக பேசுவது இதனால் தான் - உண்மையை சொன்ன முருகதாஸ்


சர்கார் கதை திருட்டு விவகாரம் தற்பொழுது கோலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர், 'சர்கார் திரைப்பட கதை தன்னுடையது' என எழுத்தாளர் சங்கத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் இந்த கதையை தான் 2007லேயே பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதனை தொடர்ந்து இரண்டு கதையையும் ஒப்பிட்ட தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவரான பாக்யராஜ், சர்கார் கதை வருண் உடையது தான். அதனால் அப்படத்தின் கதை எழுத்தாளருக்கு சேரவேண்டிய உரிமையை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு இயக்குனர் முருகதாஸ், 'சர்கார் திரைப்பட  கதை தன்னுடையதுதான் என்றும், வெறும் கதை கருவை மட்டும் ஒப்பிட்டுவிட்டு அவருடைய கதைதான் என உறுதி செய்வது என்ன நியாயம்.

ஏற்கனவே வருண் ராஜேந்திரனும், பாக்யராஜ் அவர்களும் ஒரு சீரியலில் ஒன்றாக பணி புரிந்து இருக்கிறார்கள். அந்த நட்புக்காகத்தான் அவருக்கு ஆதரவாக பாக்யராஜ் பேசுவதாக தோன்றுகிறது' என விடாப்பிடியாக பதில் அளித்து இருக்கிறார்.