Breaking News

விஜய் எதற்கும் துனிஞ்சிட்டார்...! அரசியல்வாதிகள் அவ்வளவுதான் - கஸ்தூரி அதிரடி பேட்டி


நடிகர் விஜயின் சர்கார் திரைப்பட இசைவெளியீட்டு விழா பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார்.

A.R. முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் சர்க்கார். முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் விஜய், இதுவரை இல்லாத வகையில் மிகுந்த உற்சாகத்தோடு அரசியல் பேசி இருந்தார். அவரது அந்த பேச்சு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், அரசியல்வாதிகளுக்கு பீதியையும் அளித்திருந்தது.

இந்நிலையில், சமூக வலைதள சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவரும், நடிகையுமான கஸ்தூரி விஜயின் இந்த பிரமிக்கவைத்த பேச்சு குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார்.

அதில், எப்பொழுதும் அளவாக அமைதியாக பேசி விட்டு செல்பவர், கெத்தாக ஸ்டைலாக ஒரு புதிய விஜய் போல பேசி இருந்தார்.

அவர் அரசியலுக்கு வந்துவிட்டால், ஊழல் அரசியல் வாதிகளுக்கு ஜுரம், ஜன்னி வந்துவிடும். விஜய், பயத்தினால் அவர் விமர்சித்த அரசியல்வாதிகளின் பெயரை குறிப்பிடவில்லை என பலர் கூறி வருகின்றனர்.

அது பயம் இல்லை மேடை நாகரிகம். மேலும் விஜயின் இந்த பேச்சு அவர் எதற்கும் துணிந்து விட்டதை காட்டுகிறது" என தனது கருத்தினை விஜய்க்கு ஆதரவாக தெரிவித்து இருந்தார்.