Breaking News

பள்ளி சீருடையில் விஜய்க்கு பாலாபிசேகம் செய்த சிறுவர்கள் - வைரலாகும் வீடியோ


நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் நாம் அறிந்ததே.

 இவரது திரைப்படங்கள் பற்றிய அறிவிப்பு வந்துவிட்டால் போதும், பர்ஸ்ட் லுக் முதல், திரைப்பட ரிலீஸ் வரை ஒவ்வொரு நிகழ்வையும் திருவிழா போல கொண்டாடுவது ரசிகர்களின் வழக்கம்.

அதிலும் குறிப்பாக அவரது பிரமாண்ட கட்அவுட்களுக்கு ஆபத்தான முறையில் ரசிகர்கள் பாலாபிசேகம் செய்யும் நிகழ்வுகளும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜயின் சர்கார் பட போஸ்டருக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் பாலாபிசேகம் செய்யும் காணொளியானது தற்பொழுது இணையத்தை சுற்றி வருகிறது.

இதற்கு விஜய் ரசிகர்களின் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், பள்ளி செல்லும் குழந்தைகளை இப்படிபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பது தவறு என்று கண்டனம் தெரிவித்து வருகின்றது ஒரு தரப்பு.

முன்னதாக பள்ளி வளாகத்திற்குள் விஜயின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரிய அளவில் கண்டனத்திற்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.