Breaking News

நடிகர் விஜயின் அரசியல் பேச்சு... துணை முதல்வரின் பதிலடி


சர்கார் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜயின் ஒப்பன் அரசியல் பேச்சு குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள்.

A.R. முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார். முழுக்க முழுக்க அரசியல் திரைப்படமாக சர்கார் உருவாகி இருப்பது குறித்தும், தமிழக அரசியல் குறித்தும் வெளிப்படையாக, சமீபத்தில் நடைபெற்ற அதன் இசை வெளியீட்டு விழாவில் பேசி பேசி இருந்தார் நடிகர் விஜய்.

மேலும் தான் சர்க்கார் திரைப்படத்தின் முதல்வராக நடிக்கவில்லை என்றும், ஒருவேளை தமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டது அரசியல் வருகை குறித்த முடிவினை நடிகர் விஜய் எடுத்து விட்டதாக பலரையும் பேச வைத்துள்ளது.

இந்நிலையில் விஜயின் இந்த அரசியல் பேச்சு குறித்த கேள்வியானது, தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களிடம் முன்வைக்கப்பட, "தமிழகத்தில் உள்ள 7.5 கோடி மக்களுக்கும் முதல்வராகும் ஆசை உள்ளது. அதேபோல்தான் நடிகர் விஜயும் ஆசை படுகிறார்" என கிண்டலாக பதிலளித்தார்.