Breaking News

தளபதிக்காக வெளிநாட்டவரோடு சண்டை போட்ட வரலக்ஷ்மி - சுவாரஸ்ய சம்பவம்


நடிகை வரலக்ஷ்மி, தளபதி விஜய்க்காக வெளிநாட்டவர் ஒருவரோடு வாதிட்ட சுவாரஸ்ய சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

A.R. முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் சர்க்கார். இதில் நடிகர் சரத்குமாரின் மகளும் வளர்ந்து வரும் நடிகையுமான வரலக்ஷ்மி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா, நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அப்பொழுது பேசிய நடிகை  வரலக்ஷ்மி, "சர்க்கார் திரைப்படத்தில் A.R. ரஹ்மான், தளபதி விஜய், A.R. முருகதாஸ், சன் பிக்ச்சர்ஸ் என பிரமாண்ட கூட்டணியுடன் பணியாற்றியது என்னுடைய நான்கு கனவுகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றியுள்ளது.

நான் தளபதி வெறியை. விஜயை பற்றி எவரேனும் தவறாக பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது , எந்த எல்லைக்கும் சென்று வாதிடுவேன். இது விஜய் அவர்களுக்கே தெரியும். "லாஸ் வேகாஸில்" படப்பிடிப்பு நிகழ்ந்த போது கூட, வெளிநாட்டவர் ஒருவருடன் சண்டை இட்டேன்" என குறிப்பிட்டு இருந்தார்.