Breaking News

வைரமுத்து விவகாரம்...! உண்மையை போட்டு உடைத்த A.R. ரஹ்மானின் சகோதரி..!


பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மேல் வைத்த பாலியல் குற்றச்சாட்டு திரைத்துறையில் ஒரு புறம் வரவேற்பையும் மறுபுறம் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இக்குற்றச்சாட்டு குறித்து பல திரைத்துறை பிரபலங்கள் மனம் திறந்துள்ள நிலையில், இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் அவர்களது சகோதரியும், நடிகர் G.V. பிரகாஷின் தாயுமான A.R. ரைஹானா அவர்களும் பேசி இருக்கிறார்.

இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசி இருந்த அவர், 'சின்மயியின் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஆனால் இதனை தாமதமாக வெளியே சொல்லி இருப்பதுதான் சந்தேகத்தை தூண்டுகிறது.

வைரமுத்து மீதான இந்த குற்றச்சாட்டு உண்மைதான், நானும் இது குறித்து முன்னதாகே கேள்வி பட்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல திரைத்துறையை சார்ந்த பெரும்பாலானோருக்கு அவரை பற்றி தெரியும்' எனக்கூறி வைரமுத்து ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.