அடியாத்தி இவ்வளவு மோசமானவரா வைரமுத்து..? நடு நடுங்க வைக்கும் பாலியல் புகார்கள்
தமிழ் சினிமா துறையே வியந்து பாராட்டும், பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து அவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.
தனது படைப்பிற்கு பல புகழ்மிக்க விருதுகளை வென்று, தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் பாடலாசிரியராக வலம்வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து. இப்படியொரு போற்றப்படும் இடத்தில் உள்ள 'இவரா இப்படிப் பட்டவர்?' என்று பலர் அதிர்ச்சியடையும் விதத்தில், அவரை பற்றிய உண்மைகளை போட்டு உடைத்தார் பாடகி சின்மயி.
13 வருடங்களுக்கு முன்பு, வெளிநாட்டு மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, வைரமுத்து அவர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், உடன்பட மறுத்த காரணத்தினால் தன்னை மிரட்டிய தகவலையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரங்கமாக தெரிவித்து இருந்தார் சின்மயி.
பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களையும் குற்றவாளிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் #MeToo இயக்கத்தை இந்தியாவிலும் கொண்டுவரும் நோக்கில் அவர் வெளியிட்ட இந்த பதிவை தொடர்ந்து, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலரும் அவரது உண்மை முகம் குறித்து பேச துவங்கியுள்ளனர்.
Story of an RJ on @vairamuthu pic.twitter.com/0Uht9lPqCU— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
பெண் பத்திரிக்கையாளர், திரைத்துறையை சேர்ந்த பெண்கள் என தாங்கள் வைரமுத்துவால் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்பதை தானாக முன்வந்து பேச துவங்கியுள்ளனர். இந்த குற்றசாட்டுகளானது திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Story of an RJ on @vairamuthu pic.twitter.com/0Uht9lPqCU— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018