Wednesday, 10 October 2018

பெண்கள் விடுதியில் மன்மதலீலை..! வசமாக சிக்கிய வைரமுத்து


பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்துவின் மீது வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து, திரைத்துறையை சேர்ந்த, சேராத என பலதரப்பு பெண்களும் தாங்கள் கண்ட வைரமுத்துவின் உண்மை முகம் குறித்து வெளிப்படையாக பேச துவங்கியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக அவரது மனைவி பொன்மணி வைரமுத்து நடத்தும் பெண்கள் விடுதியில் அவர் நிகழ்த்தும் மன்மத லீலைகள் குறித்த அதிர்ச்சிகர தகவல்களும் தற்பொழுது வெளிவந்துள்ளது.

இது குறித்து அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஒருவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சகல வசதிகளுடன் மிக குறைந்த விலைக்கு அவரது விடுதி கிடைத்த போது, இது வைரமுத்து அவர்களது சேவை மனப்பான்மை என்று நினைத்து வியந்தேன், ஆனால் சில நாட்கள் அங்கு தங்கி இருந்த போதுதான் உண்மையில் அவர் எப்படிபட்டவர் என்பது குறித்து புரிந்து கொண்டேன்".

பெரும்பாலும் தனது நேரத்தை அவர் அந்த விடுதிக்குள் தான் கழிப்பார். குலைந்து பேசுவது, பெண்கள் அறைக்குள் நுழைவது என அவரது நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கும். என்னுடன் தங்கியிருந்த பலரும் அவர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது குறித்து கூறி இருக்கின்றனர். ஆனால் இததனை பேர் அவரால் பாதிக்கபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.

இவர் மட்டுமல்லாது, பத்திரிக்கையாளர்கள், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என பல தரப்பட்ட பெண்களும் வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();