Breaking News

"வைரமுத்து பாலியல் சர்ச்சை" சின்மயியை வெளுத்து வாங்கிய ராதாரவி


தமிழ் சினிமா வட்டாரத்தில் சின்மயியின், வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுதான் தற்பொழுது ஹாட் டாப்பிக்.

இந்த குற்றச்சாட்டு, இவ்வளவு பெரிய மதிப்புடைய ஒருவர் இப்படி கீழ் தரமாக நடந்து கொண்டாரே என பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில், வைரமுத்து அவர்களின் தரப்பில் இந்த குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இடையே ராதாரவி அவர்களது பெயரும் இந்த சர்ச்சையில் இடம்பெற்றிருந்த நிலையில், அவதார வேட்டை எனும் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் முதன் முதலாக இது குறித்து மனம் திறந்திருக்கிறார் அவர்.

வழக்கம் போல தனது இரட்டை அர்த்த கேலி பேச்சில் சின்மயி குறித்து பேசி இருந்த ராதாரவி, '15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்பொழுது கூறி என்ன பிரயோஜனம்.

அவன் அவன் கஷ்டப்பட்டு திரைத்துறைக்கு வருகிறான். அவர்கள் மீது இப்படியொரு குற்றச்சாட்டை வைத்து வாழ்கையை நாசமாக்கி விடாதீர்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளால் போகப்போவது உங்கள் மானமும் மரியாதையும் தான்.

முன்பெல்லாம் திரைத்துறையில் சாமி வேடத்தில் நடித்த நாயகிகளை நேரில் பார்த்தால், மக்கள் சாமி ஆட துவங்கி விடுவார்கள். அப்படியொரு இடத்தில் இருப்பவர்கள் இது போன்ற விளம்பர குற்றச்சாட்டுகளால் உங்கள் மதிப்பை இழந்து விடாதீர்கள்' என்றிருந்தார்.