Breaking News

தனுஷின் வடசென்னை என்னுடைய படத்தின் கதைதான்..! பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ ஆதாரம்


வெற்றிமாறன் இயக்கதில் தனுஸ் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வடசென்னை. மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் இந்த திரைப்படம் 30 ஆண்டுகால வடசென்னையின் வரலாறு பேசும் ஒன்றாக வர இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஸ் கேரம் விளையாட்டில் சாதிக்க துடிப்பவராகவும், துரதிஷ்டவசமாக தாதாவாகிவிடும் ஒருவராகவும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சித்தார்த், 'தான் நடித்திருந்த ஸ்ட்ரைக்கர் திரைப்பட கதையும் வடசென்னையை போன்றுதான். ஆனால் வெற்றிமாறன் அவர்கள் இதை வேற லெவலுக்கு எடுத்து செல்வார் என நம்புகிறேன்' என தனது சமூகவலைதள பதிவில் கூறி இருக்கிறார்.

அதோடு சித்தார்த் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவும் அதில் அவரது கெட்டப்பும், தனுஷின் வடசென்னை கெட்டப்புடன் ஒத்து போவது, வடசென்னை ஸ்ட்ரைக்கர் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.