Wednesday, 31 October 2018

குருவை மிஞ்சிய சிஷ்யை..! திரிஷாவை புகழும் சிம்ரன்


90 களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக சிம்ரன் வலம்வந்து கொண்டிருந்த சமயத்தில், ஜூனியர் ஆர்டிஸ்டாக சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை திரிஷா.


சிம்ரன் நாயகியாக நடித்த ஜோடி திரைப்படத்தில், அவரது தோழியாக ஒரு ஓரமாக நின்று நடித்தவர் இன்று தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகை. இப்படி இருக்க பல வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றாக ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

பல வருடங்கள் கழித்து இவர்கள் மீண்டும் இணைந்துள்ளது குறித்து சமீபத்தில் பேசி இருந்த நடிகை சிம்ரன், ஜோடி படத்தில் திரிஷா என்னோடு நடித்த போதே அவர் பெரிய நடிகையாக வருவார் என சொல்லி இருந்தேன். அதை போலவே அவர் சாதித்துக் காட்டிவிட்டார்.

மேலும் எனக்கு அடுத்தபடியாக நடனத்தில் சிறந்த நடிகை என்றால் அதுவும் திரிஷா தான்' என திரிஷா பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.  
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();