Wednesday, 17 October 2018

திரையரங்குகளில் தயாராகும் "திருட்டு விசிடி" - விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை


இன்று தமிழ் சினிமாவிற்கு பெரும் சவாலாக இருக்கும் விசயங்களில் ஒன்று பைரசி இணையதளங்கள். சிறிய செடியாக முளைத்த இந்த திருட்டு விசிடி கும்பல் இன்று ஆலமாரமாக வளர்ந்து நிற்கிறது.

அவர்களை தடுக்க நடிகர் சங்கம் சார்பில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் வீண் விரையம் ஆகவே செய்வதறியாது தவித்து நிற்கின்றனர் திரையுலகினர்.

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் சினிமா இருக்கும் வேளையில், ஒரு சில திரையரங்கு உரிமையாளர்களே இந்த திருட்டு விசிடி கும்பலுக்கு துணை போவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி கிரிஷ்ணகிரியில் உள்ள முருகன் தியேட்டர், மயிலாடுதுறையில் உள்ள கோமதி தியேட்டர், கரூரிலுள்ள எல்லோரா தியேட்டர் ஆகியவற்றில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் திருட்டு தனமாக பதிவு செய்யபட்டு விற்பனைக்கு வந்தது தெரிவந்துள்ளது.


இது குறித்து பாதிக்கப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட திரையரங்கு உரிமையாளர்களின் மீது வழக்கு தொடர்ந்திருந்தாலும், நடிகர் சங்கம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக புகார் அளிக்கப்பட்ட திரையரங்குகளுக்கு இனி புதிய படங்கள் வழங்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால்.

மேலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட ஈடும்  பெற்று தரப்படும் என அவர் அறிவித்து இருக்கிறார். நடிகர் விஷாலின் இந்த நடவடிக்கையானது தயாரிப்பாளர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();