Breaking News

இப்படியொரு தரம்கெட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதா...? பிரசன்னாவை சீண்டும் ரசிகர்கள்


நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வரும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சிக்கு பலதரப்பினரிடைய எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், அதன் தொகுப்பாளரான நடிகர் பிரசன்னாவும் தற்பொழுது பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார்.

நாளுக்கு நாள், சின்னத்திரை ஆபாசம் நிறைந்த ஒன்றாக மாறி வருகிறது. ஏற்கனவே பிக்பாஸ், ரெடி ஸ்டெடி போ ஆகிய நிகழ்சிகளில் ஆபாசம் தலைவிரித்து ஆடி இருந்த நிலையில், அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக வந்ததுதான் இந்த 'சொப்பன சுந்தரி'.

மாடல் அழகிகள் பலர் ஆபாச உடையணிந்த நிலையில் போட்டியிடும் இந்த நிகழ்ச்சியானது இளசுகளை கவர்ந்தாலும், வழக்கமான சின்னத்திரை ரசிகர்களான நடுத்தர வயதினரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதனால் வழக்கம் போல, நெட்டிசன்களும் ஒரு சில சமூக ஆர்வலர்களும் இதனை வசைபாடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தொகுப்பாளரான பிரசன்னாவையும் ஒரு கை பார்த்து வருகின்றனர்.

'போயும் போயும் இப்படி ஒரு நிகழ்ச்சியையா தொகுத்து வழங்குவீர்கள்' என ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி வருகிறார் நடிகர் பிரசன்னா.