Monday, 29 October 2018

ரசிகர்களிடம் எல்லை மீறும் நடிகர் சிவக்குமார்..! அதிர வைக்கும் வீடியோ


திரைத்துறையில் திறமைமிக்க மூத்த நடிகரான சிவகுமார், ரசிகர் ஒருவரிடம் கோபமாக நடந்து கொள்ளும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரைத்துறையினரை கடவுளைப் போல பார்க்கும், ரசிகர்கள் தொழில்நுட்ப வளரச்சியால் ஆட்டோகிராஃப்பிலிருந்து நடிகர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வழக்கத்திற்கு மாறி இருக்கின்றனர்.

இந்நிலையில், தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரது செல்போனை தட்டிவிட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் நடிகர் சிவக்குமார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கடை திறப்பு விழாவின் போது நடைபெற்ற இந்த சம்பவமானது தற்பொழுது வீடியோ பதிவாக வெளியாகி இருக்கிறது.

இதனை கண்ட ரசிகர்கள் பலர், என்னதான் அனுமதி இன்றி அவர் செல்பி எடுக்க முயற்சி செய்திருந்தாலும், அவரது செல்போனை தட்டி விடுவது இப்படியொரு இடத்தில் இருப்பவருக்கு அழகல்ல என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சிவகுமார் இப்படி நடந்து கொள்வது முதல்முறையல்ல, பல தருணங்களில்  தனது கோபமான மறுபக்கத்தை ரசிகர்களிடமும், செய்தியாளர்களிடமும் காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();