Breaking News

புலிக்காக லட்சங்களை அள்ளி கொடுத்த சிவகார்த்திகேயன்


நடிகர் சிவகார்த்திகேயன் குறைந்த காலத்திலேயே நடிகர் சூர்யாவுக்கு இணையான ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்து விட்டார். இவரது ரசிகர் பட்டாளமும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.

மேலும் திரையில் மட்டும் நாயகனாக நடித்து விட்டு செல்லாமல், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையையும் கடைபிடித்து நிஜ வாழ்விலும் ஹீரோவாக ஜொலிக்கிறார்.

இதற்கிடையே புலி ஒன்றினையும் தத்தெடுத்து ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் பாராட்டுகளை பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.


நமக்கு கிடைத்த தகவலின் படி, அவர் தத்தெடுத்துள்ளது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவை சேர்ந்த அணு என்கிற வெள்ளை புலி என்பது தெரியவந்துள்ளது.

இதற்காக அப்புலியை 6 மாதங்கள் பராமரிக்க தேவையான தொகையான 2.12 லட்சங்களை பூங்கா நிர்வாகிகளிடம் சிவகார்த்திகேயன் செலுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.