Breaking News

50 லட்சம் மோசடி செய்த சிம்பு...! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


தொடர் காதல் கிசுகிசுக்கள், படக்குழுவினருடன் ஒத்துழைக்காதது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி திரைத்துரையில் அவப்பெயரை சம்பாதித்து இருந்த நடிகர் சிம்பு, சமீபத்திய நன்னடத்தையால்  ஆகா ஓகோ என புகழப்பட்டு வந்தார்.

தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த செக்க சிவந்த வானம் திரைப்படமும் வெற்றி பெற சிம்புவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என மகிழ்ந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போன்று வெளியாகியுள்ளது ஒரு தகவல்.

அதாவது கடந்த 2013ம் ஆண்டு ஃபேஷன் மூவி மேக்கர் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க 50 லட்சம் ரூபாயை முன்தொகையாக பெற்ற நடிகர் சிம்பு இன்றுவரை கால்சீட் கொடுக்க வில்லையாம்.

இதனால் சென்னை ஹைகோர்ட்டில் சிம்புவின் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர, சிம்பு பணத்தை திருப்பி தர உத்திரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல் அவரது உடைமைகள் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிடப் பட்டது.

எனினும் இது குறித்து எந்தவித பதிலும் அவர் அளிக்காமல் இருந்துள்ள நிலையில், வருகிற அக்டோபர் 31க்குள் வட்டியுடன் அவர் வாங்கிய தொகையை செட்டில் செய்யவேண்டும் எனவும் இல்லையெனில், சிம்புவின் கார், செல்போன் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என ஹைகோர்ட் எச்சரித்துள்ளது.