Wednesday, 17 October 2018

சின்மயிக்காக பேசும் சித்தார்த் ஸ்ரீ ரெட்டிக்காக ஏன் பேசவில்லை...? சீமான் அதிரடி


சின்மயியின் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு இந்திய திரைத்துறையையே பரபரப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட பெருமை மிக்க நபரின் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டினை ஜீரணிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

என்றாலும், வைரமுத்து அவர்களுக்கு ஆதரவாக ஒரு சில திரைத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுள் நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான், "ஒரு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பெயரில், வைரமுத்து அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே சின்மயி தற்பொழுது குற்றம் சாட்டி வருகிறார்" என பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.


இந்த கருத்திற்கு சமூக வலைதளங்களில் ஒருபுறம் ஆதரவுகள் தெரிவிக்கபட்டாலும், பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களே மக்களால் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாக பேசிவரும் நடிகர் சித்தார்த்துக்கு, சின்மயிக்கு ஆதரவு அளித்து பேசும் நீங்கள், ஸ்ரீ ரெட்டி எனும் பெண் புகார் அளித்த போது ஏன் வாய்திறக்கவில்லை.


சிறுமி ஆசிபா கற்பழித்து கொலை செய்யப்பட்ட போதும், தாய் வயது பெண் ஒருவரை ஆடையில்லாமல் ஓட விட்டு அடித்த போதும் தட்டி கேட்காத நீங்கள் இப்பொழுது மட்டும் ஏன் பேசுகிறீர்கள் எனவும் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

 s
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();