Breaking News

"இந்தியன்-2"விற்கு பிறகு சங்கர் இயக்கும் பிரமாண்ட திரைப்படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு


இயக்குனர் சங்கரின் படங்கள் என்றாலே பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. கிராபிக்ஸ் காட்சிகளும், ஹாலிவுட்டிற்கு இணையான உபகரணங்களும் அவரது திரைப்படங்களை உலக அளவில் பேசப்பட செய்வதும் நாம் அறிந்ததே.

அவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் - 2 திரைப்படத்தை இயக்கும் அவர், அதற்கு அடுத்த திரைப்படம் குறித்த தகவலையும் அண்மையில் வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி பிரபல ஆங்கில டிவி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்திருந்த பேட்டியில்,  2.0 போல பிரமாண்டமான அறிவியல் புனைக்கதை திரைப்படம் ஒன்றை அவர் இயக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

அப்படம் குறித்த பிற தகவல் எதனையும் இயக்குனர் சங்கர் வெளியிடாத நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு பின், அந்த அறிவியல் புனைக்கதை திரைப்படம் குறித்த தகவல் வெளியிடப்படாலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.