நடிகர் விஜயை தொடர்ந்து சர்வதேச விருது பெற்ற 'தங்கமீன்கள் சாதனா'
தங்கமீன்கள் சாதனா டயனா விருது
தளபதி விஜய் சிறந்த நடிகருக்கான IARA சர்வதேச விருதினை வென்று தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். அவரை தொடர்ந்து தற்பொழுது தங்கமீன்கள் சாதனாவும் சர்வதேச விருது ஒன்றினை பெற்றிருக்கிறார். ஆனால் இது அவரது சேவை மனப்பான்மைக்கு.
ராம் இயக்கி இருந்த தங்கமீன்கள் திரைப்படத்தில் அறிமுகமாகி தனது அருமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சாதனா. இவர் ராம் இயக்கியுள்ள பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற பெருமை மிகு, "பேரன்பு" எனும் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.
நடிப்பு மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட சாதனா, துபாயில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் நடனம், ஸ்பீச் தெரப்பி என பயிற்றுவித்து வருகிறார்.
இவரது இந்த சேவையை பாராட்டும் விதத்தில், இளம் சாதனையாளர்களை கௌரவிக்கும் டயனா சர்வதேச விருதினை வழங்கியிருக்கிறது இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று.
இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பெருமையுடன் இயக்குனர் ராம் அவர்கள் பகிர்ந்திருந்தார்.
தங்கமீன்கள் செல்லம்மாவாகவும் பேரன்பில் பாப்பாவாகவும் நடித்த சாதனா, சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான "டயானா விருது" வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள். pic.twitter.com/lfg1OnEl4o— Ram (@Director_Ram) October 9, 2018