Breaking News

விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் "சர்கார்" திரைப்பட சூப்பர் அப்டேட் இதோ


நடிகர் விஜய், A.R. முருகதாஸ், A.R. ரஹ்மான் என பிரமாண்ட கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் சர்கார். அரசியல் பேசும் படமாக உருவாகி இருக்கும் இதன் டீசர் வெளியீடு குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

விஜய் ரசிகர்களை உற்சாகத்திலேயே ஆட்கொண்டு இருக்கும் படி, பர்ஸ்ட் லுக், பாடல்கள், பிரமாண்ட இசை வெளியீட்டு விழா என அடுத்தடுத்து அசத்தி வருகிறது அதன் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ்.

என்றாலும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருப்பது என்னமோ அப்படத்தின் டீசருக்காகதான். இதனாலேயே டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக அவர்கள் ஏங்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களின் இந்த நீண்ட காத்திருப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, அப்படத்தின் டீசரானது வருகிற அக்டோபர் 18ம் தேதி ஆயுதபூஜை ஸ்பெசலாக வெளியாக இருக்கும் தகவலானது தற்பொழுது வெளிவந்துள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ தகவலை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இன்னும் வெளியிடாத நிலையில், விரைவில் அதனை எதிர்பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.