Friday, 5 October 2018

சர்க்கார் நடிகர்களால் கடுப்பான இயக்குனர் முருகதாஸ்


சர்க்கார் திரைப்பட துணை நடிகர்களின் மீது தனது அதிருப்தியினை தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் A.R முருகதாஸ்.

தளபதி விஜயின் நடிப்பில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் சர்க்கார். நடிகர் விஜய் அரசியலில் மெர்சல் செய்து இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பலர் பேசும் படி பிரமாண்டமாக சமீபத்தில் நிகழ்ந்தது.

இப்படி அனைத்தும் நல்ல விதமாக சென்று கொண்டிருந்த நிலையில், சர்க்கார் படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இயக்குனர் முருகதாஸின் கோபமான சமூக வலைதளப்பதிவு.

குறிப்பிட்ட பதிவில், "சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் சிலர் முறையான அனுமதி இன்றி, திரைப்படம் குறித்து நேர்காணல்களில் பேசி வருவதாகவும், இந்த விரும்பத்தாகத நடவடிக்கைகள் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்" அவர் தெரிவித்து இருந்தார்.




Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();