Wednesday, 31 October 2018

விஜய் ரசிகர்களால் நாங்கள்பட்ட கஷ்டம்...! மனம் வருந்திய பாக்யராஜ்...!


சர்கார் கதை திருட்டு பிரச்சனையில் A.R. முருகதாஸை விட தான் பட்ட கஷ்டங்கள் தான் அதிகம் என தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவரான பாக்யராஜ் அவர்கள் பேட்டி அளித்திருக்கிறார்.

 A.R முருதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவர தயாராக இருந்த திரைப்படம் சர்கார். வழக்கமான விஜய் படங்கள் போலவே இந்த சர்கார் திரைப்படத்திற்கும் வருண் ராஜேந்திரன் என்பவரால் இறுதி நேரத்தில் பிரச்சனை எழுந்தது.

அவர் சர்கார் திரைப்பட கதை தன்னுடைய செங்கோல் திரைப்பட கதை என அளித்த புகாரை தொடர்ந்து, பிரச்சனை கோர்ட் வரை சென்று இறுதியில் சமாதானம் செய்து கொள்வதாக அறிவித்தது முருகதாஸ் தரப்பு.

பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்ததையொட்டி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த பாக்யராஜ் அவர்கள், 'இந்த பிரச்சனையால் உருண்டது என்னமோ என் தலைதான்.

என் மகனோ தீவிர விஜய் ரசிகன், நான் அவரது பட பிரச்சனைக்கு காரணமாக இருப்பதால் என் மனைவியிடம் வத்தி வைத்து சண்டைகள் வர வாய்ப்பு இருந்தது. என் மனைவியோ சீரியல் நடிகை என்பதனால், தயாரிப்பு நிறுவனமான சன் குழுமத்திலிருந்தும் பிரச்சனைகள் எழுமோ என்ற பயம் வேறு.

இதற்கிடையே இந்த இரண்டு நாட்களாக விஜய் ரசிகர்கள் என் மகனை சமூக வலைதளங்களில் படாத பாடு படுத்திவிட்டனர். இருந்தாலும் ஒரு எழுத்தாளர் சங்க தலைவராக எனக்கு சரியென பட்டதை செய்து முடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி' என பேசி இருந்தார்.     
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();