Breaking News

முட்டுக்கொடுத்த முருகதாஸ்..! மூக்குடைத்த நீதிமன்றம்..! சர்கார் கதைத்திருட்டில் அதிரடி தீர்ப்பு


முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் திரைப்பட கதைத்திருட்டு விவகாரம் குறித்த தீர்ப்பினை இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது

தளபதி விஜயின் நடிப்பில் அரசியல் அதிரடி திரைப்படமாக சர்கார் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில், உதவி இயக்குனர் வருண் என்பவர், 'சர்கார் தனது செங்கோல் திரைப்படத்தின் கதை' என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

பல்வேறு கட்ட கதை ஒப்பீட்டிற்கு பின், தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவரான பாக்யராஜ் அவர்கள், வருணுக்கு சர்கார் கதையில் முறையான கிரெடிட்ஸ் வழங்க வேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.


இதற்கு இயக்குனர் முருகதாஸ் ஒத்துழைக்காத நிலையில், இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றது.  அந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், சர்கார் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதைதான், அதனால் அவருக்கு முறையான கதை எழுத்தாளருக்கான கிரெடிட்ஸ் வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதற்கு சர்கார் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்சும் ஒத்துழைக்க ஒப்புக் கொண்ட நிலையில், இத்தனை நாட்கள் விடாப்பிடியாக இருந்த முருகதாஸ் தரப்புக்கு பலத்த அவமானம் ஏற்பட்டுள்ளது.