Breaking News

சர்கார் இசைவெளியீட்டு விழாவை அதிரவைத்த தல அஜித்


A.R. முருகதாஸ், நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் சர்கார். இதன் இசைவெளியீட்டு விழாவானது நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

சர்கார் திரைப்படம் எப்படி அரசியல் அதிரடி திரைப்படமாக உருவாகி இருக்கிறதோ, அதைப் போலவே அதிரடியான அரசியல் பேச்சுக்கள் இந்த இசை வெளியீட்டு விழாவிலும் தெரித்தது.

குறிப்பாக நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசும் போது, ரசிகர்களின் கரகோசத்தால் அரங்கம் அதிர்ந்தது. இப்படி அரங்கை அதிர செய்தவர் நடிகர் விஜய் மட்டுமல்ல, சர்கார் படத்திற்கு துளியும் சம்பந்தமே இல்லாத நடிகர் அஜித்தும் தான். 

பெரும்பாலும் விஜய் ரசிகர்கள் கூடி இருந்த அந்நிகழ்ச்சியில், நடிகர் யோகிபாபு எதேச்சையாக தான் நடிகர் அஜித் உடன் நடித்துக்கொண்டு இருப்பதை குறிப்பிட, தளபதிக்கு கிடைத்த கரகோஷத்திற்கு இணையான ரசிகர்களின் கரகோஷங்களினால் அரங்கம் அதிர்ந்தது.