Breaking News

பேட்ட படத்தையும் சோதிக்கும் இணையதள லீக்ஸ்.... அதிர்ச்சியில் படக்குழு


சமூக வலைத்தளங்கள் வரவால் உலகத்தின் எந்த ஒரு மூலையில் நடக்கும் சிறு சிறு விசயங்களும் மக்களை எளிதில் சென்றடைந்து விடுகிறது. இது ஒருபுறம் நன்மை பயித்தாலும், அதில் விளையும் தீமைகளும் திரைத்துறையினரை ஆட்டிப் படைக்கிறது.

இதனால் திரைப்படம் ஒன்று உருவாகிறது என்றால், அதன் கதையை கட்டிக் காப்பது மிகப்பெரிய விசயமாக மாறி இருக்கிறது. படப்பிடிப்பு பகுதிகளில் கூடும் ரசிகர் கூட்டமும், அவர்களிடம் இருக்கும் செல்போன்களும் தான் எந்த ஒரு படக்குழுவினருக்கும் தீராத தலைவலி. 

சிறு புகைப்படம் கிடைத்தாலும் டிரென்ட் செய்ய சமூக வலைத்தளமும் அந்த புகைப்படத்தை வைத்தே கதையை கணித்து விடும் ரசிகர்களும் இருக்கும் பட்சத்தில் திரைத்துறையினர் பம்மி பம்மி தான் படம் எடுக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக விஜய், அஜித், ரஜினி படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் வாரம் ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில்  அட்ராசிட்டி செய்யும். 

இப்படி இருக்க பலத்த பாதுகாப்புடனே ரசிகர்களை படப்பிடிப்பில் கூட அனுமதிக்காமல் நடைபெற்று வந்தது ரஜினியின் 'பேட்ட' திரைப்பட படப்பிடிப்புகள்.  


ஆனாலும் படக்குழுவினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் வெளியாகி விட்டது, ரஜினி திரிஷா சம்பந்தப்பட்ட பேட்ட திரைப்பட புகைப்படம் ஒன்று. இதனால், இம்புட்டு எச்சரிக்கையாக இருந்தும் வெளியான இந்த புகைப்படத்தை பார்த்து செய்வதறியாது நிற்கிறதாம் கார்த்திக் சுப்பாராஜ் அண்ட் டீம்.